கல்-எளிய அலிகார் மகா வித்யாலயத்தின் புதிய க.பொ.த. உயர் தர வகுப்பு மாணவர்களை சேர்ப்பதற்கான நேர்முகத் தேர்வு எதிர்வரும் புதன்கிழமை 2024/10/09 ஆம் திகதி காலை 09 மணிக்கும் நடைபெறும்.

  • உயர் தர பிரிவில் வர்த்தகம், கலை அல்லது தொழிற் (13 வருட உத்தரவாதக்) கல்வி கற்பதற்காக மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.
  • திறமை வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு கற்பிப்பதுடன், அனுபவம் வாய்ந்த வளவாளர்களைக் கொண்டு பகுதி நேர வகுப்புகள் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
  • வெளியூர்களில் இருந்து வரும் மாணவர்களுக்கான தங்குமிட வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.
  • எமது பாடசாலையில் உயர் தர பிரிவில் (13 வருட) தொழில் கல்வியை கற்பதற்கு எந்த மொழியிலாவது க.பொ.த. சாதாரண தர பரீட்சை எழுதி இருத்தல் போதுமானது, அதில் உள்ள 26 தொழில்கல்வி பிரிவுகளில் ஒன்ரை தேர்ந்தெடுக்கலாம்.
  • பயிற்சியில் ஈடுபடும் மாணவர்களுக்கான கொடுப்பனவும் அரசினால் வழங்கப்படுவதுடன், பயிற்சியை பூர்த்தி செய்பவர்களுக்கு அரச உத்தரவாதம் கொண்ட NVQ Level-4 சான்றிதழும் TVEC மூலம் வழங்கப்படும்.
  • தெரிவு செய்யப்படும் துறைகளில் பட்டப் படிப்பையும் (NVQ Level 7) மேற்கொள்ளலாம்.

மேலதிக விபரங்களுக்கு: பாடசாலையின் பிரதி அதிபரை (0714831150) அல்லது பகுதி தலைவரை (0777842566) தொடர்பு கொள்ளவும்